Posts

கவிதைகள்

கவிதைகள் நீலப்பெருங்கடல் ஆசையில் நீந்தும் தொட்டி மீன்கள் சதுரக் கடலாய் மீண்டும் மீண்டும் சுற்றிக் கொண்டிருக்கும் அவ்வப்போது தூவப்படும் இரைகளினாலேயே பசியடங்கிப் போகும் நீண்ட பயணமாய் நீந்தும் பாவனையில் தொடக்க இடத்திலேயே சுற்றும் வேடிக்கை பார்க்கும் பிஞ்சு முகங்களின் ஒளிவளர் கண்களை நோக்கும் உலகமே வசப்பட்டதாய் உணர்ச்சிவசப்படும் வாஸ்துக் குறைகளை நீக்குதற்கென்ற பயன்பாடு நான்கு சுவர்களுக்குள் நடப்பவைகட்கான மௌன சாட்சி வீட்டு எசமானரின் பாலியல் வன்முறையைத் தடுக்கவியலாமல் தொட்டிக்குள்ளேயே சுற்றிச் சுற்றி களைத்துப் போகின்றன மீன்கள். இளவல் ஹரிஹரன்